Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை.! இபிஎஸ் கண்டனம்..!!

edapadi

Senthil Velan

, வியாழன், 21 மார்ச் 2024 (15:23 IST)
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
 
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது. 
 
ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அவர்கள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் அமலாக்க துறை சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்டணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடுள்ளார்.

 
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்மாவட்டம் என்றால் திமுகவுக்கு பயமா? வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே போட்டி..!