Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசு -தினகரன்

dinakaran
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (18:31 IST)
தமிழக அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு  அமமுக கட்சி பொதுச் செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி  அமைந்துள்ளது.

திமுக அரசு, தமிழக அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், இதற்கு விமர்சனம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது  அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது.

அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு  திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா?  சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? 

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள்,  இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம்: அதிர்ச்சி அடைந்த பெண் தேர்வர்!