Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: பெரும் பதட்டம்

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (07:13 IST)
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. 
 
 
வேதாரண்யம் பகுதியில் நேற்று ஒருவர் ஜீப்பில் வந்தபோது சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார். இந்த விபத்து காரணமாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு அந்த தகராறு இரு பிரிவினர் தகராறாக மாறிவிட்டது. இதனையடுத்து ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனை தடுக்க வந்த போலீசார் மீதும் போலீஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
 
 
இந்த நிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நாகை-நாகூர் நெடுஞ்சாலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
 
இரு பிரிவினர் இடையே மேலும் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க  ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு அதிவிரைவு படை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments