Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை..! முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.!!

Stalin

Senthil Velan

, வெள்ளி, 7 ஜூன் 2024 (13:14 IST)
நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை என்றும் நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
 
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன என்று அவர் விமர்சித்துள்ளார்.
 
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன என்று முதல்வர் கூறியுள்ளார்.
 
மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம் என குறிப்பிட்டுள்ள அவர், நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை என்றும் அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை என்றும் சமூகநீதிக்கு எதிரானவை என்றும் தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை என்றும் NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 
நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்..! மத்திய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்.!