Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும் என பதிவு..!!

Advertiesment
MK Stalin

Senthil Velan

, செவ்வாய், 4 ஜூன் 2024 (15:30 IST)
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநில சட்டமன்றத்தின் 175 தொகுதிகளுக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலோடு சேர்த்து கடந்த மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்.
 
இதில் தெலுங்கு தேசம் கூட்டணி 140-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையானதை விடவும் அதிக இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வெற்றி முகத்தில் உள்ளது. இதன் மூலம் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
 
இந்நிலையில்  சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி  ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும், அதன் மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா கூட்டணிக்கு செல்கிறதா தெலுங்கு தேசம்? சந்திரபாபு நாயுடுவிடம் கார்கே பேச்சு..!