Publish Date: Wed, 27 Mar 2019 (21:07 IST)
Updated Date: Wed, 27 Mar 2019 (21:14 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஓகியானா என்ற நிறுவனத்தின் பேட்டரி டூவீலர் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பு என்னும் இடத்தில் வரும்போது தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த புதிய ஓகி நோவா இருசக்கர மோட்டார் வாகனங்கள் எரிந்து நாசம். பேட்டரி டூவீலரில் பொருத்துவதற்காக எடுத்துவரப்பட்ட பேட்டரிகளில் இருந்து புகை கிளம்பி பின்னர் கண்டைனர் முழுவதும் பற்றி எரிந்ததால் இந்த விபத்து என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. சேத மதிப்பு குறிப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது.