Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொள்ளாச்சியில் நடிகைக்கு நடந்த கொடூரம்! போலீஸ் படையையே அனுப்பி வைத்த கலைஞர்!

Advertiesment
Actress Charmila

Prasanth Karthick

, புதன், 4 செப்டம்பர் 2024 (11:19 IST)

தற்போது மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கையால் பெரும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் பழம்பெரும் மலையாள நடிகை சார்மிளா தனக்கு பொள்ளாச்சியில் நடந்த கொடுமை குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகையான சார்மிளா 1979ல் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல தமிழ், மலையாள படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தற்போது மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டியை தொடர்ந்து பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை பேசத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் தனக்கு பொள்ளாச்சியில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து சார்மிளா தனியார் தொலைக்காட்சி நேர்க்காணல் ஒன்றில் பேசியுள்ளார். தமிழில் வி.சேகர் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த குடும்ப படம் “காலம் மாறி போச்சு”. இந்த படம் மலையாளத்தில் “அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்” என்ற பெயரில் 1997ல் வெளியானது. இந்த படத்தில் நடிகை சார்மிளா ஜெயஸ்ரீ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இந்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துள்ளது. ஷூட்டிங் முடிந்து புறப்பட இருந்தபோது தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என தனது பெண் உதவியாளரோடு சார்மிளா சென்றபோது, தயாரிப்பாளர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அவர்கள் உள்ளே வந்ததும் கதவை பூட்டிய அவர்கள் சார்மிளாவிடமும், அவரது பெண் உதவியாளரிடமும் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயன்றுள்ளனர்.
 

 

அங்கிருந்து தப்பி ஹோட்டலின் ரிசப்ஷனுக்கு வந்து போலீஸுக்கு போன் செய்ய ஃபோன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஃபோன் தர மறுத்துள்ளனர். எல்லாம் திட்டமிட்டு நடப்பதாக உணர்ந்த சார்மிளா வெளியே ஓடி சென்றுள்ளார். அங்கு எம்.பி அடைக்கலராஜிடம் பணியாற்றிய தனது சொந்தக்காரர் கிருபாகரன் என்பவரை அழைக்க ஆட்டோ பிடிக்க சென்றுள்ளார்.

 

நடந்ததை கேள்விப்பட்ட ஆட்டோக்காரர்கள் உடனடியாக அந்த ஹோட்டலுக்குள் சென்று தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்களை அடித்து அறையில் வைத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சார்மிளா தனது தந்தையிடம் சொல்ல, அவர் மூலமாக இந்த விவகாரம் கலைஞர் கருணாநிதியின் மனைவி ராசாத்தியம்மாள் கவனத்திற்கு சென்றிருக்கிறது. பின்னர் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இந்த தகவல் தெரியவர முக்கியமான காவல் அதிகாரிகளுடன் ஒரு போலீஸ் படையே அனுப்பியுள்ளார். அவர்கள் சென்று தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாதா? தமிழக அரசு விளக்கம்