Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 90 நாட்களில் இடிந்து விழுந்த விடியா ஆட்சியில் கட்டிய பாலம்: ஈபிஎஸ் ஆவேசம்..!

Siva
புதன், 4 டிசம்பர் 2024 (11:56 IST)
காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது என தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம்  கடந்த 02.09.2024 அன்று திறக்கப்பட்டது,
 
காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது .
 
இந்த திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள்  எவ்வளவு  தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி.
 
பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத முக ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
 
மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டபடுகிற பாலங்களை , மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியின் பின்னணியில் சீனர்கள்? 4 இளைஞர்கள் கைது..!

காவல் காத்து நின்ற அகாலிதள தலைவர் மீது துப்பாக்கி சூடு! பொற்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

3வது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 81 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

டிசம்பர் 10ஆம் தேதி இன்னொரு காற்றழுத்த தாழ்வா? தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்..!

'சேறு வீசியதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை: அமைச்சர் பொன்முடி

அடுத்த கட்டுரையில்
Show comments