திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளின் போது அன்னதானம் செய்பவர்கள் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .இது குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"திருவண்ணாமலை:மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.
நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.