கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என கல்வி அமைச்சர் நமசிவாயம்m அறிவித்துள்ளார். அதேபோல், விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும், கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.