கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதியை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 1995ம் ஆண்டில் சென்னையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் நாகூர் அபுபக்கர் சித்திக். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த அபுபக்கர், நாகூரில் தங்கம் முத்துகிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வைத்தது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வைத்தது உள்பட 10க்கும் மேற்பட்ட குண்டு வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டார்.
2013ல் பெங்களூர் பாஜக அலுவலகம் முன்பு குண்டு வெடித்த வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து குண்டி வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வந்த நாகூர் அபுப்பக்கர் சித்திக்கை பிடிக்க தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பல தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்ததில் அபுபக்கர் ஆந்திராவின் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
அங்கு சென்று அபுபக்கரை தமிழக போலீஸார் கைது செய்தனர். அவருடன் நெல்லையை சேர்ந்த மன்சூர் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். அவரும் பல இடங்களில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.
Edit by Prasanth.K