Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

Advertiesment
21 Bodies

Senthil Velan

, வியாழன், 20 ஜூன் 2024 (21:15 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம்  கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். 
 
இதில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.
 
webdunia
இந்நிலையில்  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் கோமுகி ஆற்றங்கரையோரம் ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டது. இறுதி ஊர்வலம் தொடங்கிய போது மழை பெய்ததால், உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!