Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்திய மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல்காந்தி

Modi Rahul

Mahendran

, வியாழன், 20 ஜூன் 2024 (16:58 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரை நிறுத்தியதாக பிரதமர் மோடி கூறும் நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பாத யாத்திரையின் போது ராஜஸ்தான் மாநிலம் வழியாக நான் சென்றபோது பல மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாக என்னிடம் தெரிவித்தனர். 
 
இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று அவர் தெரிவித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை ஏன் அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
இந்தியாவில் தேர்வு வினாத்தாள் கசிவை முதலில் நிறுத்துங்கள் அதன் பிறகு உலக விஷயங்களை கவனித்துக் கொள்ளலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்..!