Publish Date: Mon, 15 Apr 2019 (18:48 IST)
Updated Date: Mon, 15 Apr 2019 (18:49 IST)
நாகை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்ய்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் காமேஸ்வரன் என்ற பகுதியில் உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதப்பதாக அப்ப்குதி மக்கள் பார்த்து போலீஸுகு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். பின்னர் ஆற்றில் படுகொலை செய்யப்பட்டவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்று கண்டறிந்தனர்.
அதன்பின்னர் சடலத்தை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சமூகவிரோதிகளால் செய்யப்பட்டது என்று என்று பாஜகவினர் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து கீழையூர் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துவருகின்றனர்.