இந்தியா முழுக்க பல லட்சம் அரசுப் பள்ளிகள் இருப்பினும் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் தான் சில லட்சங்களை செலவழித்து படிக்கவைக்கின்றனர். ஏழை மாணவர்கள் தற்போது அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் கூட தனியார் பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர்.
இதற்குக் காரணம் தங்களுடைய கற்பித்தல் முறைகளில் தங்களுக்கு திருப்தி இல்லாமைதான். அப்படி இருந்தால் வருடம் தோறும் கல்வித் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு மாறாக மதிப்பெண் தேர்ச்சி குறைந்துவருகிறது.
இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், பணியாளர் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிக ஊதியம் பெற்றும் அரசு ஆசிரியர்கள் தேர்ச்சி விகிதம் காட்டாததால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை இழந்தனர் என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.