அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து இளம்பெண் பலி...

வியாழன், 12 செப்டம்பர் 2019 (19:57 IST)
சென்னை பள்ளிகரணையில், அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில், இளம்பெண் மீது, லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பள்ளிக்கரணையில், சாலை ஓரத்தில், அதிமுக கட்சி பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்தது.  அதனால், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண், நிலைதடுமாறி விழுந்தபோது, அவர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார்.
 
இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஸ்டாலின் எந்த காலேஜ்ல பொருளாதாரம் படிச்சார்... நக்கல் அடிக்கும் எச்.ராஜா!