சென்னையில் பிரபல பெண் தொழிலதிபர் தற்கொலை - காரணம் என்ன?

வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:22 IST)
டோயோட்டோ ரக கார்களை சென்னையில் விற்பனை செய்யும் பிரபல நிறுவனம் லார்சன் டொயோட்டோ. இதன் நிறுவனர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா. தனது கணவரின் நிறுவனத்தில் இணை இயக்குனராக இருந்து பொறுப்புகளை கவனித்து வந்திருக்கிறார் ரீட்டா.

அப்போது நிறுவன மேலாளர்களுக்கும், ரீட்டாவுக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டில் லங்கா லிங்கம் தம்பதியினரிடையே நீண்ட வாக்குவாதம் எழுந்ததாகவும் இதனால் கோபமடைந்த லங்கா லிங்கம் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. மிகுந்த விரக்தியால் மனமுடைந்து போயிருந்த ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது. மேற்கண்ட சம்பவங்கள் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் ரீட்டாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மிகப்பெரும் தொழிலதிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ’ஜீவ சமாதி’ அடையப் போகும் பிரபல சாமியார் : பக்தியில் மக்கள் கூட்டம்