Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு மெகாவிருந்து...அதிமுக எம்.பி உயிரிழப்பு... முதலமைச்சர் இரங்கல்...

Advertiesment
Nightmare
, சனி, 23 பிப்ரவரி 2019 (11:53 IST)
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜேந்திரன்,தி ண்டிவனத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் , அதிமுகவின் விவசாய பிரிவு செயலாளராக இருந்தவர். கடந்த முறை நடந்த மக்களவை தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.
 
இந்நிலையில் நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் அமைத்துள்ள பாமக தலைவர் ராமதாஸ் வீட்டில் நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களுடன் ராஜேந்திரனும்  கலந்து கொண்டார். 
 
அதன்பின்னர் திண்டிவனம் ஜக்கம் பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய அவ. இன்று அதிகாலவேளையில் சென்னை செல்ல காரில் பயணப்பட்டிருக்கிறார்.
 
அப்போது திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, சாலையில் நடுவே புதிதாக போடப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற எம்பி.ராஜேந்திரன், அவரது உதவியாளர் தமிழ்செல்வன், காட் ஓட்டுநர் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.
 
இவர்கள் மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் சிகிச்சை பலனளிகாமல் எம்பி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
 
எம்.பி ராஜேந்திரன் இறப்புசெய்தியை கேட்டு அதிமுக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனையின் முன் குழுமிவிட்டனர்.
 
இந்நிலையில் எம்.பி ராஜேந்திரன் இறப்புசெய்தியை கேட்டு இரங்கல் விடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரம் செல்கிறார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழி vs தமிழிசை – ஸ்டார் தொகுதியானது தூத்துக்குடி!