மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இதுவரை எட்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது என்பதும் இன்று ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்றைய பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே சுமூகமான முடிவு ஏற்படும் என்றும் அதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்து உள்ளதாகவும் இதனை அடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன