சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு பழக்கூடை கொடுத்து இவரை வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.
இதன்படி தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 48 பேர்களில் 42 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என்றும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் 679 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 60739 பேர்களும், கொரோனா வார்டில் 230 பேர்களும் இருப்பதாக தெரிவித்த பீலா ராஜேஷ் இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6095 என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பொழிச்சலூரை சேர்ந்த 74 மூதாட்டி, கடந்த 26 – 03 -20 ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூச்சுத்திணறுதலுக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அவர் பூரண குணமடைந்து வீட்டுக்குச் செல்கிறார். மேலும் , அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்பாடில்லாத சக்கரையும் இருந்தது என தெரிகிறது. அங்குள்ள மருத்துவர்கள் டாகடர்.ஜெயந்தி, டாக்டர் நாராயணசாமி ஆகியோர் அவருக்க்கு பழக்கூடை கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தனர்.