மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அதில், புதிதாக 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 5274 பேராக பாதிப்பட்ட்டுள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 149 அதிகரித்துள்ள்ளது எனவும் 411 பேர் மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்தவாரம் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருமா என பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோருவதாக பிரதமர் இன்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சேலத்தில் தடை உத்தரவு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அங்கு 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கடைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி என போலீசார் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
சேலத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பொருட்கள் வாங்க வெளியில் வரவேண்டும் என காவல்துறை கட்டுப்பாடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம். இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.