Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேம்பாலம் பழுதடைந்து வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளதால் தினமும் பள்ளி சென்று வர காலதாமதம் ஆகிறது என்று 6-ஆம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பி கோரிக்கை!

மேம்பாலம் பழுதடைந்து வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளதால் தினமும் பள்ளி சென்று வர காலதாமதம் ஆகிறது என்று 6-ஆம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பி  கோரிக்கை!

J.Durai

, வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:51 IST)
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக 6 ஆண்டுகளுக்கு முன் இரும்பாலான மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது இந்த பாலத்தை முறையாக பராமரிக்காத காரணத்தால் அடிக்கடி பழுது ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டு வருகிறது இதனால் மேம்பாலத்தில் இயக்கப்படும் வாகனங்கள் எல்லாம் கீழ்பகுதி வழியாக இயக்கப்பட்டு வருவதால் பலத்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
 
இதனால் தினமும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
 
இந்த நிலையில் இரையுமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 6 ம் வகுப்பு மாணவி ஒருவர் மேம்பாலம் பழுது ஏற்பட்டு உள்ளதால் தினமும் பள்ளிக்கு சென்று வர காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் இதனால் பாடங்களை சரியாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் உடனடியாக சீர்குலைந்து கிடக்கும் மேம்பாலத்தை சரிசெய்து போக்குவரத்தை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்று மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் அனுப்பி உள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்எல்சியில் பணியாற்றும் தொழிலாளி குடும்பம் நடத்துவதற்கு போதிய சம்பளம் இல்லாததால் தன்னை கருணை கொலை செய்ய கோரி குழந்தைகளுடன் என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்ததால் பரபரப்பு!