Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தரமணி தனியார் நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!

Advertiesment
தரமணி தனியார் நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!
, திங்கள், 22 மார்ச் 2021 (11:26 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை தனியார் நிறுவனத்தில் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது,

இந்நிலையில் சென்னையில் தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் கிளைகளை நடத்தி வரும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் 40 பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்விக்கு பயந்து கொல்ல பாக்குறாங்க! – அமமுக மீது கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு