Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேட்புமனுவை திரும்ப பெற இன்றே கடைசி; மாலை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்!

Advertiesment
வேட்புமனுவை திரும்ப பெற இன்றே கடைசி; மாலை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்!
, திங்கள், 22 மார்ச் 2021 (10:30 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுவை திரும்ப பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 தொடங்கி 19 வரை நடந்து முடிந்தது. இந்நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வேட்புமனுவை திரும்ப பெற விரும்பினால் இன்றே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 7,255 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி சரியான ஆவணங்கள் இல்லாத மனுக்கள், முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அந்த வகையில் 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4,492 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்று 3 மணியுடன் வேட்புமனு திரும்ப பெறும் அவகாசம் முடிவடையும் நிலையில், மாலைக்குள் வேட்பாளர்கள் முழுப்பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த விளையாட்டு பேராவது தெரியுமா? ஆம்ஸ்ஸு.. தூம்ஸ்ஸு..! – கபடியில் களமிறங்கிய ஜெயக்குமார்!