Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தி டிவி ஹரிஹரன் திடீர் விலகல். ரங்கராஜ் பாண்டேவுடன் கருத்துவேறுபாடா?

தந்தி டிவி ஹரிஹரன் திடீர் விலகல். ரங்கராஜ் பாண்டேவுடன் கருத்துவேறுபாடா?
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (20:16 IST)
தமிழின் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான தந்தி டிவி என்றாலே ரங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் ஆகிய இருவரது விவாத நிகழ்ச்சிகளில் சூடு பறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக ஹரிஹரன் ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவின




இதை உறுதி செய்வதை போல ஆய்த எழுத்து விவாத பகுதியில் ஹரிஹரனுக்கு பதிலாக இன்னொரு பெண் செய்தியாளர் விவாதத்தை நடத்தினார். இந்நிலையில் தந்திடிவி ஹரிஹரன் திடீரென புதியதாக ஆரம்பமாகும் செய்தி சேனல் ஒன்றுக்கு மாறவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆம், டைம்ஸ் இந்தியா புகழ் அர்னாவ் கோஸ்வாமி ஆரம்பிக்க இருக்கும் ரிபப்ளிக் என்ற ஆங்கின சேனலுக்கு ஹரிஹரன் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹரிஹரனின் இந்த மாற்றம் ரங்கராஜ் பாண்டேவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வந்ததாகவும், கடந்த சில மாதங்களாகவே தந்திடிவி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாயலாக சென்று கொண்டிருந்ததால் ஹரிஹரன் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் சராசரி ஊழியரை போல் அதிக சம்பளத்துடன் கூடிய பெரிய வேலை கிடைத்ததால்தான் ஹரிஹாரன் மாறியதாக இன்னொரு பிரிவினர் கூறுகின்றனர்.

எது எப்படியோ செய்திகளை விமர்சனம் செய்யும் விமர்சகர்களே இன்று செய்தியாகிவிட்டனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வின் மரணத்தில் மர்மம் - உண்ணாவிரதம் மேற்கொள்ளும் ஓ.பி.எஸ்