Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்… சட்டசபையில் அமைச்சர்!

Advertiesment
கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்… சட்டசபையில் அமைச்சர்!
, செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:38 IST)
இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கோயில்களில் தமிழ் இலக்கியங்களின் வகுப்புகள் நடக்கும் என அறிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து எழுத்தாளர்களுக்கும் இலக்கியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதுபோல கோயில்களில் தமிழ் வளர்க்கும் விதமாக கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா: தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் சி12 !