ஓபிஎஸ்-க்கு அருகதை இல்லை: ஜெ. மரணம் குறித்த முக்கிய ஆவணத்தை வெளியிட உள்ள தங்க தமிழ்ச்செல்வன்!
ஓபிஎஸ்-க்கு அருகதை இல்லை: ஜெ. மரணம் குறித்த முக்கிய ஆவணத்தை வெளியிட உள்ள தங்க தமிழ்ச்செல்வன்!
Publish Date: Fri, 18 Aug 2017 (13:41 IST)
Updated Date: Fri, 18 Aug 2017 (13:43 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நீண்ட நாட்களாக தர்ம யுத்தம் என்ற ஒன்றை நடத்தி வந்தார்.
இது நடந்தால் தான் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் அணியினர் கூறிவந்ததை அடுத்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதனையடுத்து இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பும் கூடவே அரசியல் சாயமும் பூசுகின்றனர். தினகரன் அணியினர் இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரனின் தீவிர விசுவாசியான ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமான்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் முடிவு தவறானது என்றார்.
மேலும் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தர்மயுத்தம் பற்றி பேச ஓபிஎஸ்-க்கு அருகதை இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பக விசாரணை நடத்த தினகரன் அணி தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம் என்றார்.