Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்களால சட்டமன்ற உறுப்பினரை கூட செலக்ட் பண்ண முடியாது! – அதிமுகவை வாரிய தங்க.தமிழ்செல்வன்!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (14:55 IST)
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் குறித்து பேசியுள்ள திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் “கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் கொண்டு வரப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு வலுகட்டாயமாக திணித்து வருகிறது. இவற்றை எதிர்கொள்ளும் துணிச்சல் எடப்பாடி அரசுக்கு இல்லை. அதனால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி அமைவது உறுதி” என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து பேசியுள்ள அவர் “அதிமுகவினரால் முதல்வர் வேட்பாளர் அல்ல.. ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட தேர்ந்தெடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments