நாகூர் சிவன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகூரில் நாகநாதசுவாமி கோவில் என்ற புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்குள்ள குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம், அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பலர் குளிப்பது, துணி துவைப்பது போன்றவற்றிற்கும் அந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் சிலர் அதிகாலையில் குளிக்க குளத்திற்கு வந்தபோது மீன்கள் செத்து மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தண்ணீரில் நிறம் மாற்றமாக தென்பட்டதால் எடுத்து முகர்ந்தபோது ரசாயன நெடி வீசியுள்ளது. இதுகுறித்து மக்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் மீன்கள் இறந்து கிடப்பதை கண்டு உஷாரானதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் யார் விஷத்தை கலந்திருப்பார்கள் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.