வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள சூழலில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
	
	
	கடந்த சில மாதங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அது மாற்றமடையும் என்றும், இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.