Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவருக்கு துணிச்சல் இருக்கிறது - விஜய் பேச்சுக்கு திமுக பிரமுகர் பாராட்டு !

Advertiesment
அவருக்கு துணிச்சல் இருக்கிறது - விஜய் பேச்சுக்கு திமுக பிரமுகர் பாராட்டு !
, வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:56 IST)
அரசின் தவறுகளை விமர்சிக்கும் துணிச்சல் நடிகர் விஜய்க்கு இருக்கிறது என திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய்,’சுபஸ்ரீ மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துவிட்டு எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும்’ என பேசியிருந்தார். 

இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுக வின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ’ விஜய் பேசியது நியாயமானது. வைத்தவர் மீதுதானே நடவடிக்கை எடுக்காமல் பேனரை பிரிண்ட்டிங் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, போகாத ஊருக்கு வழி சொல்வது போன்ற தவறான அணுகுமுறை. மாநில அரசின் தவறுகளை விமர்சிக்கும் துணிச்சல் நடிகர் விஜய்க்கு உள்ளது. அவருக்கு என் வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னர் மாளிகையில் நடந்தது என்ன?? – ஸ்டாலினுடன் சென்ற டி.ஆர்.பாலு விளக்கம்