Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடியோ லாஞ்ச்சில் அரசியல் பேசினாரா? தளபதியின் ஃபுல் ஸ்பீச் இதோ...

Advertiesment
விஜய்
, வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (09:39 IST)
நடிகர் விஜய் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அனைத்தும் ஒரு முழு தொகுப்பாக இங்கு காணுங்கள்...
 
விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆடியோ வெளியீட்டின் போது விஜய் என்ன பேசுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். 
 
கருப்பு சட்டையில் கெத்தாக வந்திருந்த விஜய் முதலில் அட்லி குறித்து பேசிவிட்டு, வெறித்தனம் பாடலை பாடி ரஹ்மான் சாருக்கு ஒரு சாம்பிள் அனுப்பிவிட்டேன். ஆனால் அவரிடம் இருந்து உடனே பதில் எதுவும் வரவில்லை. 
எனவே, நான் பாட வேண்டாம்னு அவர் சொல்லிவிட்டார் என நினைத்தேன். ஆனால் அட்லி போன் பண்ணி சொன்ன பிறகுதான் ரஹ்மான் சார் ரெக்கார்டிங் கூப்பிட்டது எனக்கு தெரிய வந்தது.
 
அவன் அப்படி இருக்கான் இவன் இப்படி இருக்கான்னு நாமலும் இருக்க கூடாது. எப்போதும் நமக்கென்று ஒரு அடையாளம் வேண்டும். யாருடைய அடையாளத்தையும் நாம எடுத்துக்கக்கூடாது. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. 
இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துன்கள், பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் யாரை கைது பண்ணனுமோ அவங்களை விடறாங்க... பிரண்டர்ஸ் பிடிக்கிறாங்க, யார் மேல கோவ படணுமோ அவங்கள் விட்டுட்டு லாரி டிரைவரை பிடிக்கிறாங்க. இதை எல்லாம் ட்விட்டரில் டிரெண்ட் பண்ணுங்க. 
 
எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும். வாழ்க்கையும் ஒரு ஃபுட்பால் கேம் மாதிர்தான். நம்ம கோலை தடுக்க ஒரு கூட்டம் வரும், நம்ம கூட இருக்கறவனே சேம் சைட் கோல் போடுவான். 
ஒரு முறை எம்.ஜி.ஆரிடம் கருணாநிதி குறித்து அமைச்சர் இருவர் தவறாக பேசி போது, அந்த அமைச்சரை எம்.ஜி.ஆர் காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டார். சோ, எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். இணைய மோதலில் என் ரசிகர்கல் ஈடுபட வேண்டாம். 
 
அதேபோல், என் ரசிகர்கள் ஆசையோட பேனர்லாம் வெக்கிராங்க. என் முகத்தை அடியுங்க, கிழியுங்க ஆனா என் என் ரசிகர் மீது கை வைக்காதீங்க... இது வேண்டுகோள். ஃபைனலா, விளையாட்டுல மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. ஆனா விலையாட்டுல அரசியல் பண்ணாதீங்க என பேசினார். 
விஜய்யின் இந்த பேச்சில் அரசியல் இருந்ததாக தெரியவில்லை, பொது கருத்துக்களும், தனது ரசிகர்களுக்கான மாஸ் பேச்சாகவும் மட்டுமே தெரிகிறது. ஆனால், இதிலும் அரசியல் வாடையை பூசி பல தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதே நிதர்சனம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் வேண்டாம் என சொல்லும் திமுக ஏன் அவரை சந்திக்கிறது – ஜெயக்குமார் கேள்வி !