Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க தமிழ்செல்வன் கெத்து மொத்தமா டேமேஜ்!! விஸ்வரூபமா? வெறும் பெட்டிப் பாம்பு!!

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (12:43 IST)
தங்க தமிழ்செல்வன் என்னை கண்டால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார். 
 
தங்க தமிழ்ச்செல்வனின் ஆடியோ நேற்று வெளியாகிய நிலையில்  டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். 
 
இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விரைவில் நீக்கப்படுவார். அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் ஆகிய பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என தெரிவித்தார். 
அதோடு இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்றும் குறிப்பிட்டார். தினகரன் கூறியதாவது, தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுகள், செயல்பாடுகள் சரியில்லை என புகார்கள் வந்தன. எனவே, தங்க தமிழ்ச்செல்வனை அழைத்து கண்டித்தேன்.
 
கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க நேரிடும் என கடந்த 20 ஆம் தேதியே தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்துவிட்டேன். இருப்பினும் அவர் ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு திரிகிறார்.
தங்க தமிழ்ச்செல்வனை நீக்குவதில் தயக்கமோ பயமோ இல்லை. அதேபோல் நேற்று வெளியான ஆடியோவில் தங்க தமிழ்ச்செல்வன் என்னுடைய உதவியாளரிடம் பேசவில்லை. செல்லப்பாண்டியன் என்ற கட்சி நிர்வாகியிடம்தான் பேசியுள்ளார்.
 
தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்க மாட்டார், பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். என்னை பார்த்தால் தங்க தமிழ்ச்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். தங்க தமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்பதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments