Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பியது அமமுக-வின் ’ஐ.டி.விங்’தான்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

Advertiesment
சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பியது அமமுக-வின் ’ஐ.டி.விங்’தான்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்
, வியாழன், 27 ஜூன் 2019 (13:43 IST)
அமமுக வின் ஐ.டி.விங் தான், தன்னை பற்றிய வீணான பல பொய்களை பரப்பியது என அமமுக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு, தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில், தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு, கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் ஏற்கனவே முடிவெடுத்திருந்தார் என கூறினார்.

அதன் பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம், அதிமுக திமுக ஆகிய கட்சி நபர்களிடம் ரகசியமாக பேசிவந்ததாக வெளிவந்த தகவலை குறித்து கேட்டபோது, தான் தினமும் காலை நடைபயிற்சி செல்லும்போது பல அரசியல் கட்சி நபர்களை சந்தித்தால் நலன் விசாரிப்பது வழக்கம் என்றும், தினகரனின் திட்டபடி சமூக வலைத்தளங்களில் அமமுக ஐ.டி.விங்கால் தவறாக பரபரப்பட்டது எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு முன், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக-வில் இணைய உள்ளார் என வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியதும், அதிமுக தொண்டர்கள், தங்க தமிழ்செல்வன் அதிமுக-வில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டியதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது – ட்ரம்ப் எச்சரிக்கை !