Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனுக்கு என் வளர்ச்சியின் மீது பொறாமையாக இருக்கலாம்:தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

Advertiesment
தங்க தமிழ்ச்செல்வன்
, வியாழன், 27 ஜூன் 2019 (11:25 IST)
அமமுக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தினகரனுக்கு தன் வளர்ச்சியின் மீது பொறாமையாக இருக்கலாம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தன்னுடைய பேட்டியை அளித்த தங்க தமிழ்செல்வன், தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஏற்கனவே கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் முடிவு எடுத்த பிறகு தான் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி வீணாக பல பொய்கள் பரப்பபட்டது என கூறியுள்ளார்.
webdunia

அதன் பின்பு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் “தினகரன் உங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுகிறாரா?” என கேட்ட போது, “அவர் என் வளர்ச்சியின் மீது பொறாமை படுகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நீங்கள் சொல்வது போல் அவருக்கு என் மீது பொறாமையாக கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன் தங்க தமிழ்ச்செல்வன், தான் நினைத்தால் தன்னால் பெரிய கூட்டம் ஒன்றை தனியாளாகவே சேர்க்கமுடியும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அவர் பல கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்திக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பரவி வந்ததும் குறிப்பிடத்தக்கது.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் வருகிறது அரசாங்க மதுக்கடை – ஜெகன்மோகன் அதிரடி நடவடிக்கை