Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போயஸ் கார்டனுக்கு களங்கம்: தம்பிதுரை ஆவேசம்!

போயஸ் கார்டனுக்கு களங்கம்: தம்பிதுரை ஆவேசம்!

போயஸ் கார்டனுக்கு களங்கம்: தம்பிதுரை ஆவேசம்!
, சனி, 18 நவம்பர் 2017 (14:24 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


 
 
நேற்று மாலை சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் ஷகிலா மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி அவர்கள் இருவரையும்  இரவு  9.10 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
 
21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
 
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் புனிதமானது என்றும், அதற்கு களங்கும் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும் தெரிவித்தார்.
 
மேலும் நீங்கள் கேட்கும் கேள்விகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். சோதனை நடத்தப்பட்டது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பின்னர் விவரமாக கூற உள்ளதாகவும் தெரிவித்தார் தம்பிதுரை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மீண்டும் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு