Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

Mahendran
புதன், 25 ஜூன் 2025 (11:54 IST)
ஆகஸ்ட் 15 முதல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முழுமையாக அரசியல் களத்தில் இறங்க இருப்பதாகவும், முதல் கட்டமாக மூன்று நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாகவும், அதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தவெக தலைவர் விஜய் மீது இதுவரை முன்வைக்கப்பட்ட ஒரே குற்றச்சாட்டு, அவர் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடவில்லை என்பதுதான். இந்த நிலையில், சமீபத்தில் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய், அடுத்த கட்டமாக ரோட் ஷோ நடத்த இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள மூன்று நகரங்களில் இந்த ரோட் ஷோ நடத்தப்பட இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த ரோட் ஷோவை தொடர்ந்து, அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், குறிப்பாக பெரும்பாலான கிராம மக்களை கவரும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், தவெக தலைவர் விஜய் அரசியல் களத்தில் முழுமையாக இறங்கும் நாள் நெருங்கிவிட்டதால், அவரது கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: போலீஸ் குவிப்பு.. போராட்டத்தை கைவிட தூய்மை பணியாளர்கள் மறுப்பு..!

ஆளுநரிடம் பட்டம் பெற மாட்டேன்! ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி! - நெல்லையில் பரபரப்பு!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments