Publish Date: Sat, 28 Jul 2018 (13:00 IST)
Updated Date: Sat, 28 Jul 2018 (13:03 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக கவலைக்கிடமான நிலையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் முத்த தலைவரான தா. பாண்டியன் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இவருக்கு வயது 85.
உடல் நிலைக்காரணமாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரின் உடல் நலம் விசாரிக்கு இவர் நேற்று கோபாலபுரம் வந்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை. அவரிடம் இயற்கை போராடுகிறது” என பேட்டியளித்தார்.
இந்நிலையில், திடீரென இன்று பகல் 12 மணிக்கு மேல் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி கம்யூனிஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.