Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு: சென்னையில் ரஜினி ரசிகரின் அதிசய ஓட்டல்

Advertiesment
10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு: சென்னையில் ரஜினி ரசிகரின் அதிசய ஓட்டல்
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (21:25 IST)
சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு:
சென்னையில் மதிய சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 50 லிருந்து அதிகபட்சம் 300 வரை செலவாகும் என்பது தெரிந்ததே இந்த நிலையில் சாலிகிராமத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் பத்து ரூபாய்க்கு அளவு சாப்பாடு போடும் ஓட்டலை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி ரூபாய் 30 க்கு அளவில்லா சாப்பாடும் இவரது ஓட்டலில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
காலை மற்றும் மாலை நேரங்களில் கிடைக்கும் லாபத்தை வைத்து மதிய சாப்பாடு இழப்பீடை சரிக்கட்டுவதாக பேட்டி ஒன்றில் இந்த ஓட்டலின் உரிமையாளர் வீரபாகு என்பவர் கூறியுள்ளார். சாலிகிராமம் என்பது சினிமா வேலை வாய்ப்பு தேடி வரும் இளைஞர்கள் தங்கி இருக்கும் இடம் என்பதால் இந்த ஓட்டல் ஆரம்பித்தவுடனே செல்வாக்குப் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
10 ரூபாய்க்கு சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் உடன் அளவு சாப்பாடு கிடைப்பது என்பது அதிசயமான ஒன்று என்று இங்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் ரஜினி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய இருப்பதால் தன்னால் முடிந்த சேவையை மக்களுக்கு செய்து வருவதாகவும் ஓட்டல் உரிமையாளர் வீரபாகு குறிப்பிட்டுள்ளார்,இந்த ஹோட்டலில் மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பத்து ரூபாய் சாப்பாடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி தேர்தல் குறித்து ப.சிதம்பரம் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி