Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு தடையா? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு தடையா? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
, செவ்வாய், 14 நவம்பர் 2017 (04:36 IST)
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது. கடவுள் ஏழை, பணக்காரர் என்று பார்ப்பவர் கிடையாது. ஆனால் கோயில்களில் பணம் உள்ளவர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி சாமி சிலை அருகே நிமிடக்கணக்கில் கடவுளை வணங்குகின்றனர், ஏழைகள் தூரத்தில் இருந்து கடவுளை ஒருசில நொடிகள் மட்டுமே வணங்க அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அரவிந்த் லேச்சுனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்


 


இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சிறப்பு தரிசனத்தின் போது சாமி சிலை அருகே பக்தர்களை அனுமதிக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்தவர்களும் இனி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பற்றி எரிகிறது நாகார்ஜுனனின் அன்னபூர்ணா ஸ்டுடியோ: பெரும் பரபரப்பு