Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடத்தகராறில் கோவில் பூசாரி வெட்டிப் படுகொலை- இளைஞர் ஒருவர் கைது!

J.Durai
புதன், 3 ஜூலை 2024 (10:25 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ்.
 
அதே ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலில் பூசாரியாக உள்ளார்.
 
இதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான இடம் 40 சென்ட் இந்த கோவிலின் அருகே உள்ளது, இதில் 10 சென்ட் கோவில் இடத்தில் உள்ளதாகவும்,10 சென்ட் கோவிலுக்கு சொந்தம் என பூசாரி பவுன்ராஜ்-க்கும், தனக்கு சொந்தம் என முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  இரவு கோவிலில் உள்ள விளக்குகளை போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த பூசாரி பவுன்ராஜ்-யை கோவில் முன்பு இடைமறித்த முருகன், இந்த இடப்பிரச்சனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இதில் இடப்பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு கூறி பூசாரி பவுன்ராஜ் தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூசாரி பவுன்ராஜ்-யை தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
 
படுகாயமடைந்த பூசாரி பவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முருகனைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இடத்தகராறில் பூசாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments