Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை..!

Mahendran
புதன், 3 ஜூலை 2024 (10:11 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது என்றும் அது குறித்து விசாரணை செய்தபோது அது போலியான மிரட்டல் என்று தெரிய வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
ஏற்கனவே சென்னை விமான நிலையத்திற்கு மூன்று முறை சமீப காலத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்து விட்டது என்பதும் அதேபோல் கவர்னர் மாளிகை உள்பட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதை ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று நள்ளிரவு இந்த இமெயில் வந்ததை அடுத்து உடனடியாக மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை செய்து வருவதாகவும் முழுமையான சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் நபரை போலீசார் தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments