கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் தொல்லை: 70 வயது பூசாரி கைது..!

Mahendran
வியாழன், 26 செப்டம்பர் 2024 (12:54 IST)
கோவிலுக்கு வந்த சிறுவர், சிறுமிகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே பெரியகுளம் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் 70 வயதான திலகர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி, கோவிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதை அறிந்த சிறுமி பதற்றத்தில் கோவிலில் இருந்து வெளியே வந்து பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். இதனை அடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் கோவில் முன்பு திரண்டு, பூசாரியிடம் நியாயம் கேட்டனர்.

 இதனை அடுத்து, அவர் பயந்து கொண்டு கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார். பொதுமக்கள் இதை அறிந்து, போலீசாருக்கு தகவல் வழங்கினர். பின்னர், போலீசார் கோவிலுக்குள் சென்று ஒளிந்திருந்த பூசாரியை கைது செய்தனர்.

சிறுவர், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூசாரி திலகருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்