Publish Date: Mon, 19 Mar 2018 (11:45 IST)
Updated Date: Mon, 19 Mar 2018 (20:55 IST)
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராஜா. இவரது மனைவி சண்முகப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் , இன்று சண்முகப்பிரியா தனது வீட்டில் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசார்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அணிந்திருந்த சங்கிலி திருடுபோனதும், அவரது கழுத்தை துணி காயப் போடும் கயிரால் அறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணைக்காக அவரது கணவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.