Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை சாமர்த்தியமாக காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

Advertiesment
தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை சாமர்த்தியமாக காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
, வியாழன், 15 மார்ச் 2018 (11:33 IST)
தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் காலால்  உதைத்து காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
 
சினாவின் நன்ஜிங் நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் 8-வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர். தனது வீட்டின் ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறினார்.
 
இதனால் அங்கிருந்த மக்கள்  தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணின் வீட்டின் ஜன்னல் வழியாக தீயணைப்பு வீரர் ஒருவர் ஏறினார்.
 
அப்போது அந்த பெண் ஜன்னல் மேல் தற்கொலை செய்வதற்காக அமர்ந்திருந்தாள். இதனால் தீயணைப்பு வீரர் அந்த பெண்ணை காலால்  உதைத்து வீட்டிற்குள் தள்ளி காப்பாற்றினார்.
 
இந்த வீடியோ தற்போது  சமூகவளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள் அனைவரும் அந்த தீயணைப்பு வீரரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 



Thanks- CGTN

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியில் அம்மா