ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன இருந்தாலும் ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் சம்பளம் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாகக் குறைப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல்கள் வருகின்றன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டியில் கூறியுள்ளார்.