Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 அமைச்சர்களை சந்தித்தும் நடவடிக்கை இல்லை; ஆசிரியர்கள் திடீர் உண்ணாவிரதம்..!

Advertiesment
teachers protest
, வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (11:29 IST)
12 அமைச்சர்களை சந்தித்தும் நடவடிக்கை இல்லை; ஆசிரியர்கள் திடீர் உண்ணாவிரதம்..!
12 அமைச்சர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர்கள் திடீரென உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமன தேர்வை செய்ய கோரி, சென்னையில் ஆசிரியர்கள் சற்று முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாறும் நியமன தேர்வை தேர்வு நடத்தும் அரசாணை 149 என்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் 2013, 2014, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் நியமனம் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி கூறிய நிலையில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொத்தமா 840 விமானங்கள் வேணும்! பல்க் ஆர்டர் கொடுத்த ஏர் இந்தியா!