11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 7ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
1. செய்முறைத் தேர்வு மையங்கள் அமைத்தல்.
2. செய்முறைத் தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட பணியாளர்களை நியமித்தல்
* முதன்மைக் கண்காணிப்பாளர்
* புறத்தேர்வாளர்கள் (வேறு பள்ளி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.)
* அகத் தேர்வாளர்கள் (அதே பள்ளி ஆசிரியாகளை நியமிக்க வேண்டும்.)
* திறமையான உதவியாளர்கள் (தேவைக்கேற்ப)
* எழுத்தர்
* அலுவலக உதவியாளர்கள், துப்புரவு பணியாளர், குடிநீர் வழங்குபவர் (Waterman)
முதன்மைக் கல்வி அலுவலர்கள் போதுமான கல்வித் தகுதியுள்ள திறமையான பணியாளர்களை செய்முறைத் தேவு நடத்துவதற்கு நியமனம் செய்ய வேண்டும்.
செய்முறைத் தேர்வுகள் நடத்துவதற்கு துறை அலுவலர்களை நியமனம் செய்யத் தேவையில்லை''.
மேலும் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை மார்ச் 11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது