தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டில் மே மாதத்தில்தான் தேர்வுகள் நடைபெற உள்ளன.
ஆனால் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகள் செயல்படும் நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி வரை என மாற்றியமைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.