Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிக்கலாவை இணைத்தால் மட்டும்தான் வெற்றி! – ஓபிஎஸ் முன் பேசிய அதிமுக பிரமுகர்!

Advertiesment
Tamilnadu
தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் சசிக்கலாவை இணைப்பதே வழி என அதிமுக பிரமுகர் ஒருவர் ஓபிஎஸ் முன்பாக பேசியுள்ளார்.

கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவிற்குள்ளேயே கோரிக்கைகள் எழ தொடங்கியுள்ளன. அதேசமயம் மற்றொறு தரப்பினர் அதிமுகவில் சசிக்கலாவை இணைக்க கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் முன்பாக பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் “அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்துள்ளது வருத்தமளிக்கிறது. தொடர் தோல்விகளில் இருந்து மீள சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி உடை, உணவு ரூல்ஸ் இல்ல! - ஆசிரமம் தொடங்கிய அன்னபூரணி சாமியார்!